சன்டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் 2கே கிட்ஸ்களையும் மீண்டும் சீரியல் பக்கம் இழுத்தது எனலாம். ஒடிடி தளங்களில் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்தவர்களை மீண்டும் சீரியல் பார்க்க வைத்த பெருமை எதிர்நீச்சல் சீரியலுக்கு உண்டு. மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் எப்படியெல்லாம் ஆணாதிக்கத்தில் பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொன்னது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதாவினை விட மாரிமுத்து புகழ் பெற்றார்.
திடீரென அவர் மாரடைப்பால் மரணமடைய ஆதி குணசேககரன் கதாபாத்திரத்திற்கு நடிகரும், எழுத்தாளருமாகிய வேல.ராமமூர்த்தி நடித்தார். எனினும் மாரிமுத்துவின் இடத்தில் வேல.ராமமூர்த்தியை ரசிக்க மக்கள் ஏனோ மறுத்து விட்டனர். இதன் காரணமாக டி.ஆர்.பி-யில் எதிர்நீச்சல் சரியத் தொடங்கியது. எனவே இயக்குநர் திருச்செல்வம் அடுத்தடுத்து ஒவ்வொரு கதாபாத்திரங்களாக முடித்து வைத்தார். இறுதியில் சீரியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த மதுமிதா இடம்பெறவில்லை என்பதை அவரே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. யாரும் ஏமாந்துறாதீங்க ப்ளீஸ்..
அவர் வெளியிட்ட இன்ஸ்ட்டா பதிவில், “ ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது அன்பான ரசிகர்களுக்கு, இதயம் நிறைந்த நன்றியுடன், சில காரணங்களால் நான் இனி எதிர்நீச்சல் பகுதி 2 இன் பாகமாக இருக்க மாட்டேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் அசைக்க முடியாத ஊக்கம் எனக்கு உலகத்தை உணர்த்தியது, மேலும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்த அனைத்து நினைவுகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் ஒரு அற்புதமான புதிய வாய்ப்பில் அடியெடுத்து வைக்கும்போது, எதிர்காலத்திலும் நீங்கள் அதே அன்பையும் ஆதரவையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.”
என் பக்கத்தில் இருப்பதற்கு நன்றி, மிகுந்த அன்பும் நன்றியும், எப்போதும். என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். இதனால் எதிர்நீச்சல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.