இலக்கிய உலகில் இன்றளவும் சுஜாதாவின் பெயர் நீடித்து நிலைத்திருப்பதற்கு காரணம் அவரின் பொக்கிஷ நாவல்கள். ஸ்ரீரங்கம் ரங்கராஜனாக அறியப்பட்ட சுஜாதாவின் நாவல்கள் தீர்க்கதரிசி சொல்வதை போன்றது.
இன்றைய நவீன உலகில் வரப்போவதை எல்லாம் முன்பே கணித்து சொன்னவர் சுஜாதா. தான் கதை எழுதிய விக்ரம் படத்தில் கம்ப்யூட்டர், ராக்கெட் என காட்டி அந்த நாளைய மக்களை வியந்து பார்க்க வைத்தவர்.
சொல்லப்போனால் கம்ப்யூட்டரை முதன் முதலில் இவர் எழுதிய கதையான விக்ரமில்தான் அனைவரும் வியந்து பார்த்தனர் .
90களின் ஆரம்பத்தில் இவரின் கதையில் என் இனிய இயந்திரா என்ற சீரியல் கலக்கு கலக்கு என கலக்கியது. அதில் வரும் மெமரி கார்டு, சிப், ரோபோ, போனில் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவது போன்ற காட்சிகளை எல்லாம் ரசித்து பார்த்தவர்கள் பலர். இப்படி எல்லாம் நடக்குமா என நினைத்தவர்கள் சிலர். இன்று ஆண்ட்ராய்டு போனில் அசால்ட்டாக வீடியோ காலிங் செய்து கொண்டிருக்கிறோம்.
கொலையுதிர்காலம்,என்ற இவரது கதை புத்தகமாக வெளியாகி பரபரப்பாகி பின்பு தூர்தர்ஷனில் தொடராக வந்து பரபரப்பு பெற்றது. நடிகர் விவேக் நடித்திருப்பார் சஸ்பென்ஸின் உச்சத்திற்கு கொண்டு சென்ற சீரியல் அது.
அதுபோல் கரையெல்லாம் செணபகப்பூ என்ற நாவல் சாதாரணமாக விகடனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நாவல். பாழடைந்த பங்களா, ஜமீன், கிராமத்து அப்பாவி மக்கள் என பின்னணியில் கதை எழுதி பட்டைய கிளப்பி இருப்பார் சுஜாதா. இது படமாகவும் வெளியாகி வரவேற்பு பெற்றது.