சுப்ரமணியபுரம் படத்துல இப்படி ஒரு பிளானே இல்ல..! ரகசியத்தை உடைத்த சசிக்குமார்..

By John A

Published:

தமிழ் சினிமாவில் முதன் முதலாக மதுரை ஸ்டைல் பேச்சு வழக்கு, சண்டைக் காட்சிகளில் அரிவாள் கலாச்சாரம் ஆகியவற்றை முதன்முதலாக ஆரம்பித்து வைத்த படம் என்றால் அது சுப்ரமணியபுரம் படம் தான். பாலா, அமீர் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி தானே இப்படத்தைத் தயாரித்து இயக்கினார் சசிக்குமார். படம் வெளியாகி சில நாட்களுக்குப் பிறகு விமர்சனங்களால் பாராட்டினைப் பெற்று அடுத்து வெற்றி பெற்றது.

இப்படத்தின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். கண்கள் இரண்டால்.., மதுரை குலுங்க குலுங்க.., காதல் சிலுவையில்.., சுப்ரமணியபுரம் எங்கள் தலைநகரம்.. ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. என்னதான் பாடல்கள் ஹிட் ஆனாலும் ஆரம்பத்தில் இப்படத்தில் சசிக்குமார் பாடல்களே இல்லாமல் தான் படத்தினை உருவாக்க நினைத்தாராம். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியே எடுக்க நினைத்தாராம். ஆயினும் சில காட்சிகளில் கதைக்கும் இளையராஜா பாடல்களுக்கும் ஒத்துப் போகாத நிலையில் தனியே பாடல்களை ஷுட் செய்திருப்பார்.

சினிமாவில் விழுந்த பெரிய இடைவெளி… அலைபாயுதே படத்தை விட ஒரு படி மேல் நடந்த பிரசாந்த் சம்பவம்!

இருப்பினும் சுப்ரமணியபுரம் படத்தில் இளையராஜாவின் பங்கு அதிகம். குறிப்பாக ஜெய் – ஸ்வாதி காதல் காட்சிகளில் சிறு பொன்மணி அசையும்.. பாடல் முழுக்க ஒலிக்க விட்டிருப்பார். இது படத்திற்குப் பெரிதும் பலம் சேர்த்தது. அதேபோல் ஊர்த் தலைவர் வரும் போது ஒலிக்கும் தோட்டம் கொண்ட ராசாவே பாடலும் அந்தக் காட்சிக்குப் பெரிதும் கைகொடுத்தது. இவ்வாறு படம் முழுக்க இளையராஜாவின் இசை இன்ஸ்பிரேஷன்கள் படம் முழுக்க ஒலித்தது.

இப்படத்தில் கோவில் திருவிழா பாடலான மதுரை குலுங்க பாடலுக்கு இளையராஜாவின் திருவிழாப் பாடலையும், காதல் சிலுவையில் என்ற காதல் சோகப் பாடலுக்கு இதயம் போகுதே பாடலையும் சேர்க்க நினைத்தாராம் சசிக்குமார். ஆனால் ஜேம்ஸ் வசந்தன் முதன் முதலாக நான் இசையமைக்கிறேன்.. படத்தில் பாடல் இல்லாமல் இருந்தால் எப்படி என்று சசிக்குமாரிடம் கேட்க, இதனையடுத்து மற்ற பாடல்கள் உருவாகியிருக்கிறது.