Bigg Boss 9 Tamil : அவங்க 2 பேரை டார்கெட் பண்ணலாம்.. ரம்யா, சுபிக்ஷா சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்.. அப்போ அந்த சண்டைக்கு இவங்க தான் காரணமா?..

பிக் பாஸ் வீட்டில் பொதுவாக எந்த சீசனை எடுத்துக் கொண்டாலும் பிரபலங்களுக்கு இணையாக சில பேர் வாழ்க்கையில் நிறைய சிரமப்பட்டு ஒரு இடத்துக்கு உயர்ந்திருப்பார்கள். அப்படி வரும் போட்டியாளர்கள் மீது ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு ஒரு…

Subiksha and Ramya Plan

பிக் பாஸ் வீட்டில் பொதுவாக எந்த சீசனை எடுத்துக் கொண்டாலும் பிரபலங்களுக்கு இணையாக சில பேர் வாழ்க்கையில் நிறைய சிரமப்பட்டு ஒரு இடத்துக்கு உயர்ந்திருப்பார்கள். அப்படி வரும் போட்டியாளர்கள் மீது ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு ஒரு அன்பு இருக்கும். அந்த வகையில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஒன்பதாவது பிக் பாஸ் சீசனின் முதல் நாளில் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் போதே பெயர் பெற்றவர்கள் தான் சுபிக்ஷா மற்றும் ரம்யா ஜோ ஆகிய இருவரும்.

இதில் சுபிக்ஷா ஒரு மீனவ குடும்பத்திலிருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் ரம்யா ஜோ தனது வீட்டு சூழ்நிலைக்காக ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனமாடி நிறைய வலிகளை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளார். இவர் தொடர்பான வீடியோக்களை பார்த்த போது பார்வையாளர்கள் ஒரு நிமிடம் கலங்கிப்போன நிலையில் நிச்சயம் இந்த சீசனில் இவர்கள் இருவருமே தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று தான் கருதி வருகின்றனர்.

ரம்யா, சுபிக்ஷாவால் அதிர்ச்சி

அப்படி ஒரு சூழலில் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் இருவரும் இணைந்து போட்ட ஒரு திட்டம் ஒரு பக்கம் ஆதரவை பெற்றாலும் இன்னொரு புறம் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. அனைத்து சீசனை போல இந்த முறையும் பிக் பாஸ் வீட்டில் நிறைய பேர் தனித்தனி அணிகளாக பிரிந்து கொண்டு நிறைய நேரம் கதைகளை பேசியும், வேடிக்கையாக பல விஷயங்களை செய்தும் வருகின்றர்.

இந்த முறை பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மற்றும் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் நிறைய உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திவாகர் மற்றும் விஜே பார்வதி ஆகிய இருவரும் சமீபத்தில் மற்ற அனைவருக்கும் உதவி செய்து வரும் சூழலில் தான் ஒரு சின்ன சலசலப்பு உருவாகி உள்ளது.

பார்வதி வேலை செய்யும் போது வேண்டுமென்றே அவரிடம் ஏதாவது வேலைகளை சுபிக்ஷா கொடுக்க, இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை உருவானது. அப்போது நீ வேண்டுமென்றே இப்படி செய்யாதே என பார்வதி எச்சரிக்க கொஞ்சம் பரபரப்பும் அங்கே உருவானது. இதற்கு மத்தியில், ரம்யா மற்றும் சுபிக்ஷா ஆகிய இருவருமே விஷம் என்றும் திவாகரிடம் கூறுகிறார் பார்வதி. அதே போல, திவாகர் மற்றும் ரம்யா ஆகிய இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்திருந்தது.

அவங்கள டார்கெட் பண்ணுவோம்

இதற்கு மத்தியில், சுபிக்ஷா மற்றும் ரம்யா ஆகிய இருவரும் தனியாக பேசும் விஷயம் இன்னும் பூதாகரத்தை உண்டு பண்ணியுள்ளது. இதில் ரம்யாவிடம் பேசும் சுபிக்ஷா, “இன்னைக்கு நாம் பார்வதி மற்றும் திவாகரை டார்கெட் செய்து விட்டோம். அடுத்த நாளில் வேற்று ஆட்களை டார்கெட் செய்யலாம்எனக்கூற பதிலுக்கு ரம்யாவும் அவர்கள் தற்போது அதிகம் ரியாக்ட் செய்யவில்லை என்பதால் மீண்டும் அவர்களையும் சேர்த்து டார்கெட் செய்யலாம் என பேசுகிறார்.

இதனால் திவாகர்ரம்யா சண்டை, சுபிக்ஷாபார்வதி சண்டை திட்டமிடப்பட்டது என பலர் கூறி ரம்யா மற்றும் சுபிக்ஷா பேச்சால் அதிர்ந்து போனாலும் இன்னொரு பக்கம் பிக் பாஸ் கேம் என்பது டார்கெட் செய்வதில் தான் உள்ளது என்றும் அவர்கள் இருவருக்கும் ஆதரவாக பேசுகின்றனர்.