மேயாத மான் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.
எஸ்.ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர் படம் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகையானார்.
இவர் அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் மாஃபியா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசுரன் பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.
முழு ஆக்சன் படமான இதில் அருண் விஜய்யுடன் இவரும் ஸ்டண்ட் காட்சிகளில் கலக்கி இருக்கிறாராம்.