பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65. கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிறு வயதிலேயே கராத்தே, பாக்சிங் ஆகியவை கற்றார் கோதண்டராமன். இவரது ஆர்வத்தினைப் பார்த்த கராத்தே மாஸ்டர் இவரை ஸ்டண்ட் யூனியனில் சேர்த்து விட்டிருக்கிறார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக உயர்ந்தார். இவர் ராம்கி நடித்த எல்லாமே என் பொண்டாட்டி தான், முரளி, சிவாஜி நடித்த எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். மறைந்த நடிகர் முரளியுடன் அதிக படங்களில் பணியாற்றியிருக்கிறார் கோதண்டராமன்.
வட போச்சே..! சிதைந்த ஆஸ்கர் கனவு.. ரேஸில் இருந்து வெளியேறிய லாபதா லேடீஸ்..காரணம் இதான்..!
மேலும் விஜய், அஜீத் நடித்த ஆக்சன் படங்களான பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் போன்ற படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதுமட்டுமன்றி பல படங்களில் துணை வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த கோதண்டராமனுக்கு சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படம் புதிய அடையாளத்தினைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து காமடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவரது வீட்டில் காலமானர்.