இலங்கையில் நீண்ட காலம் விடுதலை புலிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் நீண்ட காலம் சண்டை நடந்து வந்தது.
ராஜீவ் கொலை, 2009ல் தமிழர்கள் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டது, 83இலங்கை கலவரம், பத்மநாபா கொலை வழக்கு என இலங்கை அரசு மற்றும் விடுதலை புலிகள் பற்றிய அதிர்ச்சி நிகழ்வுகள் ஏராளம்.
அந்த காலத்தில் இருந்து இலங்கையில் தமிழ் பாடல்கள் பிரபலமாக இருந்த விசயங்களாகும். இலங்கை வானொலி கேட்டு அந்த காலத்தில் தமிழ் பாடல்களை அறிந்து கொண்டோர்தான் அப்போது அதிகம்.
விடுதலை புலிகள் ஆதிக்கம் அதிகம் இருந்த அந்த காலத்தில் புலிகளுக்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்ததாம்.
அதன் படி ரஜினிகாந்த் நடித்த பாயும் புலி படத்தின் பாடல்களை ஒலிபரப்பும்போது படத்தின் பெயரை குறிப்பிடும்போது புலி பெயர் வராமல் இருக்க இரும்புக்கை என குறிப்பிடுவார்களாம்.
சிங்கார வேலன் படத்தில் வரும் புதுச்சேரி கச்சேரி படத்தில் டைகராச்சாரி என்று வரும் வரியை அமைதியாக[மியூட்} இருக்கும்படி ஒலிபரப்புவார்களாம்.
இது இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் பெயருக்காக அந்த காலங்களில் இலங்கை அரசு செய்த தடைகளாகும்