மண்ணில் இந்த காதலன்றி பாடல்.. உண்மையாகவே மூச்சு விடாமல் பாடினாரா எஸ்.பி.பி.? ரகசியத்தை போட்டுடைத்த கங்கை அமரன்

By John A

Published:

பாடும்நிலா எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி இசையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம், போஜ்புரி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் எண்ணிலடங்கா பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார்.

இப்படி சாதனைகளின் வடிவமாகத் திகழும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கேளடி கண்மணி படத்தில் நடித்துப் பாடியமண்ணில் இந்த காதலன்றி.. பாடல் வெகு பிரபலமானது. இந்தப் பாடலை மேடையில் பாடாதவர்கள் எவரும் இல்லை. எஸ்.பி.பி-யின் எவர்கிரீன் ஹிட் பாடல்களில் கேளடி கண்மணி பாடலுக்கு தனிச்சிறப்பு உண்டு.

இந்தப் பாடலில் சரணத்தில் ராதிகா எஸ்.பி.பி யிடம் மூச்சு விடாமல் பாட முடியுமா என சவால் விடுப்பார். அதற்கு எஸ்.பி.பி உடனே முத்து மணி ரத்தினங்களும்.. என ஆரம்பித்து மூச்சு விடாமல் சரணத்தைப் படித்து முடிப்பார். உண்மையாகவே இந்தப் பாடல் ரிக்கார்டிங்கின் போது மூச்சு விடாமல் எஸ்.பி.பி படிக்கவில்லை.

பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்

கேளடி கண்மணி படத்திற்காக இளையராஜா, கங்கை அமரனின் மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் வரிகளில் உருவானது தான் இந்தப் பாடல். பாவலர் வரதராஜன் ஏற்கனவே பல பாடல்களை எழுதி வைத்திருந்தார்.

இளையராஜா இந்தப் படத்திற்காக தனது அண்ணனின் பாடலைப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் பாடலுக்கான டியூனை போட்டு விட்டு கங்கை அமரனிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். கங்கை அமரனும், எஸ்.பி.பியும் எந்த இடத்தில் நிறுத்திப் பாடலாம். என கலந்துரையாடி இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றனர்.

உண்மையாகவே இந்தப் பாடல் எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடியது கிடையாது. ரெக்கார்டிங்கின் போது போதிய இடைவெளி எடுத்தே பாடியிருக்கிறார். இந்தத் தகவலை மேடை ஒன்றில் கங்கை அமரன் பாடல் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் பாடலைப் படமாக்கும் போது எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். கேளடி கண்மணி படம் எஸ்.பி.பி. என்ற இசை அரசனை நடிகனாக்கி அழகு பார்த்தது. இந்தப் படத்தினைத் தொடர்ந்து எஸ்.பி.பி பல படங்களில் நடித்தார்.