Bigg Boss Tamil Season 8 : ராணவ் போனதால நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. போட்டு உடைத்த சவுந்தர்யா.. காரணம் இதான்

Soundariya and Raanav : பிக் பாஸ் வீட்டில் இருந்து 8 வது சீசனில் முதல் ஆளாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார் ரயான். இதனால்…

Soundariya about Raanav

Soundariya and Raanav : பிக் பாஸ் வீட்டில் இருந்து 8 வது சீசனில் முதல் ஆளாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார் ரயான். இதனால் மற்ற போட்டியாளர்கள் அடுத்த இரண்டு வாரங்கள் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றிற்கு முன்னேறி விட வேண்டும் என்பதிலும் மிக தீவிரமாக இருந்து வருகின்றனர்.

TTF டாஸ்க்கிலும் கூட ஏராளமான சண்டைகள் அரங்கேறி இருந்த சூழலில், அவை அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. இனியுள்ள நாட்கள் மிக கவனமாக ஆடி மக்கள் மத்தியில் பெயரை எடுத்து ஃபைனல் முன்னேறுவது மட்டும் தான் பலரின் இலக்காகவும் உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் பலரது ஃபேவரைட்டாக இருப்பது முத்துக்குமரன், சவுந்தர்யா, ஜாக்குலின், தீபக் உள்ளிட்ட போட்டியாளர்கள் தான்.

கவனம் ஈர்த்த ராவ்

இதனிடையே, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ராணவ், ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாரான ஆட்டத்தை ஆடியிருந்தார். ஆனால் நாள் செல்ல செல்ல, தனது பிராங்க் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராணவ், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகியிருந்தார். இதற்கு முன்பு ஜெஃப்ரி மற்றும் அன்ஸிதா ஆகிய இருவரும் வெளியேறிய போது பல போட்டியாளர்கள் கண்ணீர் வடித்திருந்தனர்.

ஆனால் ராணவ் வெளியேறிய போது யாருமே கண்ணீர் வடிக்காமல் ஆனந்தமாக அனுப்பி வைத்திருந்தனர். இது பற்றி விஜய் சேதுபதி அருகே நின்ற போது பேசியிருந்த ராணவ், எனக்காக ஒருவர் கூட கண்ணீர் விடவில்லை என்றும் ஆனந்தமாக அனுப்பி வைத்தனர் என்றும் கூறினார். ஆனால், ராணவிற்கு நடிகராக வேண்டும் என்ற கனவு உள்ளதால் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த புகழை வைத்து வெளியே சென்றால் பெயர் கிடைக்கும் என்று தான் போட்டியாளர்கள் கருதினர்.

நீ வெளிய போனது மகிழ்ச்சி

இது தொடர்பாக ராணவ் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் உரையாட, “சவுந்தர்யா நீ இப்படியே இரு. நீ வாழ்க்கையில் ஜெயிக்க வாழ்த்துக்கள். பெரிய ஹீரோயினா நீ வரணும். வாழ்த்துக்கள்” என சவுந்தர்யாவிடம் ராணவ் கூறினார். இதனைத் தொடர்ந்து ராணவ் பற்றி பேசிய சவுந்தர்யா, “நான் தான் இந்த வீட்டில் இருக்கும் பலரை எரிச்சல் அடைய வைப்பதாக நான் நினைத்து கொண்டிருந்தேன்.

ஆனால், என்னையே எரிச்சல் அடைய வைக்க இந்த வீட்டிற்கு வந்தவன் தான் ராணவ். அவர் எலிமினேட் ஆனார் என பெயரை காண்பித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து உன்னை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்பினாய். இப்போது உன்னை அனைவருக்குமே தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

இங்கிருந்து வெளியே சென்று நீ நீயாக இருப்பாய் என நான் நினைக்கிறேன். அதற்காகவே நீ வெளியேறியதால் மகிழ்ச்சி அடைந்தேன்” என கூறியதும் சில போட்டியாளர்கள் சிரிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் நிஜத்தில் சவுந்தர்யா நல்ல எண்ணத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.