இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் பல படங்கள் முதல் நாள் வசூல் ஒரு கோடி ரூபாய் கூட தாண்டாத நிலையில் படுதோல்வியை சந்தித்தன. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூலை எட்டிய நிலையில் அதன் பின்னர் படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் 100 கோடி வசூலை தாண்டியது.
கருடன் முதல் நாள் வசூல்:
சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்த அரண்மனை 4 படத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளரான குஷ்பூ நடிகை சிம்ரன் உடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்.
அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் பெரிதாக ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே பத்தாம் தேதி வெளியான அந்த படம் அதிகபட்சமாக 20 கோடி வசூலை மட்டுமே எட்டியது.
சந்தானம் நடித்து வெளியான இங்கே நான் தான் கிங்கு உருப்படியாக 4 கோடி ரூபாய் வசூலை கூட தொடவில்லை. ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் ஒரு கோடி ரூபாய் வசூலை கூட எட்டவில்லை. அவருடன் போட்டியாக கடந்த வாரம் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த பிடி சார் திரைப்படம் இதுவரை 4 கோடி ரூபாய் வசூலை மட்டுமே பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஆர்.வி. உதயகுமார், மைம் கோபி, ஷிவதா, ரோஷினி, ரேவதி சர்மா உள்ளிட்ட படம் நடித்த கருடன் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாளில் அந்த படம் அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் சொல்லு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் வேற லெவலில் இருப்பதாக விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கும் நிலையில் கருடன் திரைப்படம் அதிக வசூலை பெரும் எனது எதிர்பார்க்கப்படுகிறது. சூரி நடிப்பில் கடந்தாண்டு வெளியான விடுதலை 2 திரைப்படம் 40 கோடி வசூல் செய்த நிலையில், கருடன் திரைப்படம் 50 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.