சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து தலா இரண்டு படங்களை கொடுத்த துரை செந்தில் குமார் அந்த இரண்டு பேருக்கும் எந்த அளவுக்கு தரமான சம்பவத்தை செய்தாரோ அதைவிட ஒரு படி மேல் கூடுதல் உழைப்பை கொட்டி சூரியை மாஸ் ஹீரோவாக மாற்றியுள்ளார்.
கருடன் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்:
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், ரேவதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது.
முதல் நாளில் கருடன் திரைப்படம் அதிகபட்சமாக 4.45 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த நிலையில் இரண்டாம் நாளான சனிக்கிழமை 6 கோடி ரூபாய் வசூல் செய்த 2 நாட்களில் 10.45 கோடி ரூபாய் வசூலை கருடன் திரைப்படம் எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை திரைப்படம் கூட அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட குறைவான வசூலை ஈட்டியதாகவும் அந்த படம் லாபகரமான படம் இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், கருடன் திரைப்படம் சூரிக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் படமாக மாறும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் பலரும் கணித்துள்ளனர்.
தூள் கிளப்பிய சூரி:
இரண்டு நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலை சூர்யா நடித்துள்ள கருடன் திரைப்படம் கலந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகபட்சமாக 8 கோடி முதல் 10 கோடி வரை வசூல் வரும் என்றும் முதல் வாரத்திலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டினால் அடுத்த வாரமும் சூரியின் கருடன் திரைப்படம் கல்லா கட்டும் என்றும் அரண்மனை 4 படத்துக்கு பிறகு இந்த ஆண்டு அதிக வசூல் வேட்டை நடத்தும் படமாக கருடன் மாறும் என்றும் கூறுகின்றனர்.
சூரி நடிப்பில் இந்த ஆண்டு கொட்டுக்காளி, விடுதலை 2 படங்களும் அடுத்தடுத்து வெளியானால், இந்த ஆண்டு சூரியின் மார்க்கெட் கடகடவென உயர்ந்து விடும் என்றும் மற்ற காமெடி நடிகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு நல்ல நடிகராக சூரி சூப்பரான இடத்துக்கு முன்னேறுவார் என்றும் கூறுகின்றனர்.
அந்தளவுக்கு நடிப்பின் மீது அதிகளவிலான ஆர்வத்தையும் அதற்கு ஏற்ற உழைப்பையும் சூரி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்திலும் சூரிக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.