மிக மிக அவசரம் என்றொரு திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படத்தை இயக்கி இருப்பவர் சுரேஷ் காமாட்சி. முக்கியமாக இப்படம் பெண் போலீஸ் படும் அவஸ்தைகளையும், கடுமையான பந்தோபஸ்தின்போது அவர்கள் படும் துயரத்தையும் மனவலிகளையும் விரிவாக எடுத்து கூறியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இப்படத்தை பாராட்டியுள்ளார். இப்படத்தின் கதாநாயகியான ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்தும் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த சூரியும் இப்படத்தை புகழ்ந்துள்ளார்
திரைப்படம் பெண் காவலர்களின் நிலையை உறக்கசொல்லி இருக்கிறது என அறிந்தேன். படக்குழுவுக்கு வாழ்த்துகள். இப்படத்திற்க்கு என் நண்பர் ஜெகன் கதை – வசனம் எழுதி உள்ளார் என்பதில் மிக்க மகிழ்ச்சி என சூரி கூறி உள்ளார்.