கொட்டுக்காளி படத்தை பார்க்க வராதீங்க… இப்படி ஒரு வார்த்தையை சொன்ன நடிகர் சூரி…

By Meena

Published:

மதுரையில் பிறந்தவர் நடிகர் சூரி. இவரது இயற்பெயர் ராமலட்சுமணன் முத்துசாமி என்பதாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி படத்தை பார்த்த பின்பு தனது பெயரை சூரி என்று மாற்றி வைத்துக் கொண்டார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் மதுரையில் இருந்து சென்னைக்கு 1996 ஆம் ஆண்டு குடிப்பெயர்ந்தார் சூரி.

ஆரம்பத்தில் சினிமாவில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சென்னையில் துப்புரவு பணியாளர், ஹோட்டல் பணியாளர் என கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து வந்தார் சூரி. அதற்கு பிறகு சின்னத்திரை தொடர்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவது, படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்பது போன்ற மிகச் சிறிய வேடங்களே சூரிக்கு கிடைத்தது அதையும் ஏற்று சிறப்பாக நடித்தார் சூரி.

பின்னர் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சூரி. அந்தப் படத்தில் 50 புரோட்டாக்களை சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டது மிகப் பிரபலமாக மாறியது. அந்த இடத்தில் அவரை பரோட்டா சூரி என்றே மக்கள் அழைத்தனர். அதற்குப் பிறகு சினிமாவில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க சூரிக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவும் ஹீரோக்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரத்திலும் நடிக்க ஆரம்பித்தார் சூரி.

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, ஜில்லா, ரஜினி முருகன், இது நம்ம ஆளு, சீம ராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, சங்க தமிழன், சாமி ஸ்கொயர் போன்ற பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சூரி. 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் சூரி.

விடுதலை படத்தின் மூலமாக மிகப் பிரபலமான சூரி தனது நடிப்பிற்காக அனைவரின் பாராட்டையும் பெற்றார். விடுதலை பாகம் 2 விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்குப் பிறகு கருடன் படத்தில் நடித்தார். இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. தற்போது சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கொட்டுக்காளி பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி இந்த படத்தை பற்றி பேசுகையில், மற்ற படத்தை பார்ப்பது போல் இந்த படத்தை நீங்க பார்க்க வராதீங்க. இது சமூகத்திற்கு தேவையான கதையை கொண்ட படம். இந்த படத்தை பார்த்து முடித்துவிட்டு நீங்க வெளியே செல்லும்போது உங்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் சூரி.