நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வந்து பல நாட்களான நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டருடன் படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 7 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.