SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் SJ சூர்யா.
பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 2010 காலகட்டத்திற்கு பிறகு நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் SJ சூர்யா. நடிகராக இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் SJ சூர்யா.
வில்லன் நடிகராக ஸ்பைடர், டான், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா, இந்தியன் 2 ராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் SJ சூர்யா. தற்போது தென்னிந்தியாவில் மிகவும் பிசியான ஒரு நடிகராக வலம் வருகிறார் SJ சூர்யா.
தற்போது விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தில் SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் நேர்காணில் கலந்து கொண்ட போது அப்படத்தின் நாயகி துஷாரா விஜயனை பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார் SJ சூர்யா.
SJ சூர்யா கூறியது என்னவென்றால், நான் பழைய படங்களை அதிகம் பார்ப்பேன். அதில் சாவித்திரி அம்மா வருவாங்க அவங்கள மாதிரி தான் துஷாரா விஜயனும் நல்லா பெர்ஃபார்ம் பண்ணுவாங்க. அவங்கள மாதிரி நல்ல உயரத்துக்கு துஷாரா வரணும்னு ஆசைப்படுறேன். சிம்பிளா சொல்லனும்னா துஷாரா விஜயன் டைரக்டர் ஆர்டிஸ்ட் தான் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் SJ சூர்யா.