என்னுடைய கனவு இதுதான்… அதுக்காக தான் கல்யாணமே செஞ்சுக்கல… மனம் திறந்த SJ சூர்யா…

SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…

sj surya

SJ சூர்யா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் பிரபலமான நடிகராவார். 1999 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் SJ சூர்யா.

பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 2010 காலகட்டத்திற்கு பிறகு நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் SJ சூர்யா. நடிகராக இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் SJ சூர்யா.

வில்லன் நடிகராக ஸ்பைடர், டான், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா, இந்தியன் 2 ராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் SJ சூர்யா. தற்போது தென்னிந்தியாவில் மிகவும் பிசியான ஒரு நடிகராக வலம் வருகிறார் SJ சூர்யா.

தற்போது விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படத்தில் SJ சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக கார்த்தியின் சர்தார் 2 படத்தில் நடித்துள்ளார் SJ சூர்யா. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட SJ சூர்யா தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் எனக்கு ஒரு சில லட்சியங்கள் இருக்கிறது. அதனால் நான் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. கலைத்துறையில் இந்தியாவுக்கு எம்ஜிஆர் ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது நடக்கலாம் நடக்காமலும் போகலாம். அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பகிர்ந்து இருக்கிறார் SJ சூர்யா.