இனி இவர் மட்டுமே தன்னுடைய வாழ்க்கை என பல்டி அடித்த ரட்சிதா! அவங்க எப்பவுமே அப்படித்தா….

கணவர் தினேஷ்யை பிரிந்து வாழ்ந்து வரும் ரட்சிதா மகாலட்சுமி இனி இவர் மட்டுமே தன்னுடைய வாழ்க்கை எனக்கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது தற்போழுது வைரல் ஆகி வருகிறது.

பெங்களூருவை சேர்ந்த ரட்சிதா தமிழில் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதை தொடர்ந்து பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் அவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரையும், புகழையும் ரட்சிதாவிற்கு பெற்று தந்தது. இதை அடுத்து சக சீரியல் நடிகர் தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரட்சிதா. அவருக்கு ஜோடியாக சீரியலிலும் நடித்து வந்தார்.

சமீபத்தில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தினேஷ்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரட்சிதா. இதை அடுத்து இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அவ்வப்போது பேச்சுக்கள் அடிப்பட்டது. இருப்பினும் தினேஷ் தான் ரட்சிதாவை விவாகரத்து செய்து கொள்ளும் முடிவில் இல்லை என்று கூறி வருகிறார்.

இதற்கிடையில் கடந்த வாரம் நடிகை ரஞ்சிதா திடீரென மாங்காடு காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் சென்று தன்னுடைய கணவர் தினேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டுவதாக கூறி பரபரப்பு புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்படி எந்த மெசேஜும் அனுப்பப்படவில்லை என்பது உறுதியாகவே காவல் துறையினர் ரட்சிதாவை எச்சரித்து அனுப்பியது மட்டுமின்றி இருவரும் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்று கொள்ள அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

பிரபல யூடியூபரை நம்பி களமிறங்கும் நயன்தாரா! ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

இந்த நிலையில் தான் இருக்கும் மோசமான மனநிலையில் தெரபிஸ்ட் ஆக இருக்கும் ஒரே ஒருவர் என குறிப்பிட்டு தனது பூனையுடன் இருக்கும் வீடியோவை வெளியே வெளியிட்டுள்ளார். மை ஒன் அண்டு ஒன்லி ஒன் தெரபிஸ்ட் மை பேபி என என ரட்சித்தாவின் பதிவு தற்போழுது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...