2018 ஆண்டு பொன்ராமின் இயக்கத்தில், ஆர். டி. இராஜா தயாரிப்பில் வெளியான சீமராஜா திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் நெப்போலியன், சூரி போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர்.
இந்தப் படமானது உண்மைச் சம்பவத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையாகும். அதாவது இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னனாக இருந்து வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி.
இவர் அவர்களின் ஊரான சிங்கம்பட்டியினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நல உதவிகள் செய்துவந்தார். இவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார். ஒருவாரம் கழித்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்துள்ளார்.
இவருக்கு சீமராஜா படக் குழுவினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர், மேலும் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் உருக்கமாக, “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடிக்கும் பெருமை எனக்கு கிடைத்தது, உண்மையில் எது என் பாக்கியமாகும். அதற்காக எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சீமராஜா படமானது வசூல் ரீதியாக ஹிட் ஆகவில்லையென்றாலும், குழந்தைகள் மத்தியில் அந்தப் படம் பிரபலம் என்றே சொல்லலாம்.