சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய ’ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய திரைப்படம் ஒன்று பாதியில் நின்று போனதும் தெரிந்தது இந்த படம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது
மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பிற விபரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட இருப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது