அட்லீயுடன் இணைந்த சிவகார்த்திகேயன்… காரணம் என்னனு தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது…

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

குறுகிய காலத்தில் மிக அதிக உயரத்தை எட்டிய சிவகார்த்திகேயனை பார்த்து அனைவரும் வியந்துதான் போகிறார்கள். அதேபோல் அவருடைய உழைப்பும் முயற்சியும் இருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு தன்னுடைய சினிமா பயணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சிவகார்த்திகேயன் பல இயக்குனர்களை சந்தித்து படம் பண்ணலாம் என்று பேசுகிறார் என்ற செய்தி வெளியானது. தற்போது மேலும் ஒரு செய்தி அவரைப் பற்றி வெளியாகியிருக்கிறது.

அது என்னவென்றால் அட்லீ பான் இந்தியா படமாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு மசாலா கமர்சியல் படத்தை எடுக்கப் போகிறார். இப்படத்தின் பட்ஜெட் 600 கோடி அதற்காக அவருக்கு சம்பளம் 100 கோடி கேட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். இதன் மூலம் அவர் பான் இந்தியா நடிகராக மாறிவிடலாம் என்ற எண்ணத்துடன் அட்லீயோடு இணைந்து இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.