ஆஹா.. இந்த பொங்கல் வின்னர் சிவகார்த்திகேயன் தான் போல!.. அயலான் விமர்சனம் இதோ!..

By Sarath

Published:

இன்று நேற்று நாளை படத்திற்கு பிறகு பல வருட போராட்டத்தில் ரவிக்குமார் உருவாக்கிய அயலான் திரைப்படம் கடைசி நேரம் வரை இருந்த எல்லா சிக்கல்களையும் சமாளித்துவிட்டு இந்த பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பெரிய விருந்து கொடுத்த ரிலீஸ் ஆகியுள்ளது.

அயலான் விமர்சனம்: 

சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பாலசரவணன், சரத் கேல்கர் மற்றும் இஷா கோபிகர் உள்ளிட்ட பலர் அயலான் படத்தில் நடித்துள்ளனர். ஆரம்பக் காட்சியிலேயே குட்டி யானை ஒன்றுக்கு வைத்தியம் பார்க்கும் நல்ல மனம் கொண்ட இளைஞராக அனைத்து உயிரினங்களையும் நேசிக்கும் மனிதராக சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்கின்றனர்.

வேற்று கிரகத்திலிருந்து விழும் ஒரு பொருளை கைப்பற்றும் கார்ப்பரேட் வில்லன் அதை வைத்து தனது பேராசையால் அதிக இலாபத்தை ஈட்ட நினைக்கிறார். ஆனால் அது மக்களுக்கு பேரழிவாக முடிந்து பலர் இறக்கின்றனர். இதே வேலையை அவர் தொடர்ந்து வரும் நிலையில், அவரை தடுக்க வேற்று கிரகத்திலிருந்து ஏலியன் ஒன்று பூமிக்கு வருகிறது. வில்லனை ஏலியன் எப்படி சமாளிக்கிறது. சிவகார்த்திகேயன் எப்படி உதவுகிறார் என்பதுதான் இந்த அயலான் படத்தின் கதை.

சிஜி சூப்பர்:

சிஜியை பெரிதும் நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு சிஜி சொதப்பி இருந்தால் படம் ஃபிளாப் ஆகியிருக்கும். ஆனால், கால தாமதம் ஆனாலும், அந்த விஷயத்தில் கராறாக இருந்து வேலை வாங்கி இருக்கிறார் ரவிக்குமார் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவின் முதல் ஏலியன் திரைப்படம் என்று இதை சொல்லலாம். பல வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் மட்டுமே ஒரு வேற்றுகிரக கதையாக உருவான கலையரசி படத்தில் நடித்திருப்பார். ஹாலிவுட்டில் பல இன்னும் வெளியாகி உள்ள நிலையில் நம்ம ஊரில் ஏலியனை கொண்டு வந்து குட்டி சுட்டிசுக்கு காட்டியது சிவகார்த்திகேயன் தான்.

ஜாலியான ஏலியன்:

படம் ஆரம்பத்தில் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆகிறது. ஏலியன் பூமிக்கு வந்ததும் படம் சூடு பிடிக்கிறது. ஏலியனை வைத்து யோகி பாபு, சிவகார்த்திகேயன், பாலசரவணன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் செய்யும் ரகளைகள் குழந்தைகளை ரசிக்க வைக்கிறது.

இரண்டாம் பாதியில் படம் ஆக்சன் படமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் ஏலியனின் சக்தி சிவகார்த்திகேயனுக்கு செல்ல ஏலியன் முடிக்க நினைத்த விஷயத்தை அவர் எப்படி சாதித்து காட்டினார் என்பதுதான் அயலான் படத்தின் மொத்த கதையாக விரிகிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் மீண்டும் மாவீரன் போலவே பொறுமையை சோதித்தாலும் இந்த படம் கேப்டன் மில்லர் படத்துக்கு எவ்வளவோ பரவாயில்லை என ரசிகர்கள் விமர்சனம் கொடுத்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தால் வேறலெவல் ஹிட் அடித்து இருக்கும்.

அயலான் – ஏலியன் அட்டகாசம்!

ரேட்டிங்: 3.5/5.