அயலான் டிரெய்லர் ரிலீஸ்!.. ஏலியன் சிஜி எல்லாம் தரமா இருக்கே.. கேப்டன் மில்லருக்கு செம சவால் விடுமா?

Published:

சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள அயலான் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் டைம் டிராவல் படத்தை காட்டிய இயக்குநர் ரவிக்குமார் தற்போது ஏலியன் படத்தை கொடுக்க காத்திருக்கிறார்.

6 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால், ஹீரோ சிவகார்த்திகேயன் தனது 25 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுத் தர வேண்டும் என்கிற நிலை உருவான நிலையில், இந்த படம் வெளியாக வேண்டும் என்பதற்காக சம்பளத்தையே வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.

அயலான் டிரெய்லர் ரிலீஸ்:

ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் சித்தார்த்தும் ஒரு பைசா கூட வாங்காமல் சிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான மாவீரன் படத்தில் விஜய்சேதுபதி குரல் கொடுத்திருந்த நிலையில், இந்த படத்திற்கு சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார்.

அயலான் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், வெட்டுக்கிளி படையெடுப்பு, இந்த உலகத்தில் புழு பூச்சிக்கும் வாழ அனுமதி உள்ளது என்று ஏகப்பட்ட நல்ல பாசிட்டிவான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

சிஜி வொர்க் சூப்பர்:

ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காக ஒரு வில்லன் டீம் உலகை அழிக்க முயற்சித்து வரும் நிலையில், வேற்றுகிரக வாசியான ஏலியன் பூமிக்கு வந்து அந்த வில்லனின் தப்பான புராஜெக்ட்டை எப்படி சிவகார்த்திகேயன் உடன் இணைந்து செய்யப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் சிஜி காட்சிகள் எல்லாம் தரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஹாலிவுட் தரத்துக்கு இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று பார்த்தால் சில இடங்களில் சொதப்பலான வெட்டுக்கிளி கிராபிக்ஸ் காட்சிகளும் இடம்பெற்று கடுப்பை கிளப்பத்தான் செய்கின்றன.

ஆனாலும், குழந்தைகளை என்டர்டெயின் பண்ணும் அளவுக்கு அயலான் நிச்சயம் இந்த பொங்கலுக்கு விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு எந்தளவுக்கு அயலான் டஃப் கொடுக்கும் என்பது அடுத்த வாரம் தெரிந்து விடும்.

 

மேலும் உங்களுக்காக...