சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் நேற்று வெளியானது. சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் கதைதான் இது. இதில் நயன் தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியும் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை பார்க்க சென்று சிக்கலில் சிக்கி விட்டனர் ஆந்திர போலீசார் ஏழு பேர்
நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் கிராமங்கள் தோறும் கிராமசபை கூட்டம் நடக்கிறது. இதற்கு பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்களான 7 போலீசார் இந்த படத்துக்கு சென்றனர். அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல் தங்கள் தலைவரின் படம் என்பதால் ஆடிப்பாடி அதை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். இது வைரலான நிலையில் மாவட்ட எஸ்.பி பகீரப்பா இது குறித்து நடவடிக்கை எடுக்க டி.எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளார்.