Siragadikka Aasai: சத்யாவை மீட்க மாறி மாறி உதவி செய்யும் முத்து – அருண்.. இருவரின் சந்திப்பு எப்போது?

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் சத்யாவை சிட்டி குழுவினர் கடத்தும் சிசிடிவி வீடியோவை முத்து மற்றும் மீனா காண்கிறார்கள். உடனே அவனை மீட்க என்ன செய்ய…

sa2 2

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்றைய எபிசோடில் சத்யாவை சிட்டி குழுவினர் கடத்தும் சிசிடிவி வீடியோவை முத்து மற்றும் மீனா காண்கிறார்கள். உடனே அவனை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கிறார்கள். அப்போது, இந்த சிசிடிவி வீடியோவை வைத்து சத்யாவின் மொபைல் எண் கடைசியாக எங்கே இருந்தது என்பதை கண்டுபிடித்தால், சத்யா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று முத்து ஒரு ஐடியா கூறுகிறார்.

இந்த நிலையில், சீதா தன்னுடைய காதலர் அருணுக்கு போன் செய்து, தன்னுடைய தம்பி காணவில்லை என்றும், சிட்டி என்பவன்தான் ஏதாவது செய்திருக்கலாம் என்றும் கூறுகிறார். அதற்கு அருண், “நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் சைபர் கிரைம் வழியாக கண்டுபிடித்து தருகிறேன். சத்யாவின் மொபைல் எண்ணை மட்டும் எனக்கு அனுப்பு,” என்று கூறுகிறார்.

அருண், அந்த மொபைல் எண்ணை சைபர் கிரைமுக்கு கொடுத்து லொக்கேஷன் கண்டுபிடிக்க சொல்கிறார். இதற்கிடையே நேரடியாக சைபர் கிரைம் சென்று, முத்து மற்றும் செல்வம் “லொகேஷன் கண்டுபிடித்து தாருங்கள் ” என்று சொல்ல, அங்கு உள்ள அதிகாரி, “அப்படி எல்லாம் கொடுக்க முடியாது. முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அதன் பிறகு தான் முடியும்,” என்று கூறுகிறார்.

இந்த நிலையில், லொக்கேஷனை கண்டுபிடித்த போலீசார், அதை அருணுக்கு தெரிவிக்க, அருண் அதை சீதாவுக்கு சொல்கிறார். சீதா அதை முத்துவுக்குத் தெரிவிக்க, உடனே அந்த லொக்கேஷனை நோக்கி முத்து மற்றும் செல்வம் செல்கிறார்கள்.

இதற்கிடையே, மீனாவின் அம்மா வந்து, “என்னுடைய மகனுக்கு ஏதாவது ஆகிவிட்டால், நான் உயிரோடு இருக்க மாட்டேன்,” என்று கூற, மீனா மற்றும் சீதா அதிர்ச்சி அடைகிறார்கள்.

இந்த நிலையில், சத்யாவை தேடி சென்ற முத்து மற்றும் செல்வம், ஒரு பாழடைந்த இடத்தில் சத்யா கட்டிவைக்கப்பட்டிருப்பதை பார்த்து அங்கு சண்டையில் இறங்குகின்றனர். அதே நேரத்தில் போலீசார் வந்து சேர்ந்து, சிட்டி மற்றும் அவரது குழுவினரை பிடித்து செல்கிறார்கள்.

சத்யா தனது மாமாவுக்கு நன்றி சொல்லி கட்டிப்பிடிக்கிறார். “சரி வா, உனக்கு பரீட்சைக்கு நேரம் ஆகுது,” என்று முத்து சத்யாவை அழைத்துச் செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

நாளைய எபிசோடில், சத்யா இருக்கும் லொக்கேஷன் சீதாவுக்கு எப்படி கிடைத்தது என்று முத்து சந்தேகம் அடைகிறார். அப்போது, மீனா, அருணை காதலிக்கும் உண்மையை சொல்ல ஆரம்பிக்க இருக்கும் நிலையில், நாளைய ப்ரோமோ முடிகிறது.