Siragadikka Aasai: முத்து – அருண் நேருக்கு நேர் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது.. இனிமேல் தான் ட்விஸ்ட்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சற்று முன் வெளியான அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோவில், எதிரும் புதிருமாக இருக்கும் முத்து மற்றும் அருண் நேருக்கு…

sa 1

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சற்று முன் வெளியான அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோவில், எதிரும் புதிருமாக இருக்கும் முத்து மற்றும் அருண் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறார்கள் என தெரிகிறது.

இன்றைய ப்ரோமோ வீடியோவில், முத்துவுக்கு சீத போன் செய்து, “என்னுடைய தம்பியை காணவில்லை. இரவு முதல் வரவில்லை,” என கூறுகிறார். உடனே முத்து, “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று பதிலளிக்கிறார். பின்னர், “வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வா. ஒரு முக்கியமான இடத்திற்கு — சிட்டி வீட்டுக்கு போகணும்,” என செல்வத்திடம் கூறுகிறார். இருவரும் நேராக சிட்டி வீட்டுக்கு செல்லுகின்றனர்.

அங்கு சிட்டியின் அலுவலகத்தில் பூட்டி இருக்கிறது. “சத்யாவை தேர்வு எழுத விடாமல் செய்வேன்,” என்று ஏற்கனவே சிட்டி சவால் விட்டிருந்தார். அந்த வகையில் சிட்டி சத்யாவை கடத்தி ஒரு இடத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி,
“உனக்கு போதை மருந்து கொடுக்கப்போகிறேன். போதை மருந்து கொடுத்தவுடன் உன்னை வெளியே அனுப்பப் போகிறேன்,” என்று மிரட்டுகிறார்.

இந்த நிலையில், அருணுக்கு சீதா போன் செய்து “ஒரு சின்ன பிரச்சனை… எனக்கு உதவி செய்யுங்கள். என்னுடைய தம்பியை நேற்று இரவு முதல் காணவில்லை,” எனக் கூறுகிறார்.

அதற்கு அருண், “உன்னுடைய தம்பியின் மொபைல் நம்பரை எனக்கு அனுப்பு. நான் சைபர் க்ரைமில் சொல்லி, அவன் கடைசியாக எங்கே இருந்தான் என்பதை கண்டுபிடிக்கிறேன்,” என பதிலளிக்கிறார்.

இந்நிலையில், சத்யாவின் வண்டியின் இருக்கும் இடத்தை செல்வம் மற்றும் முத்து கண்டுபிடிக்கின்றனர். அதேபோல், அருணும் சத்யாவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அருணுக்கு போன் செய்து,
“நான் என்னுடைய அக்கா மாப்பிள்ளை அதாவது மாமா போன் நம்பர் தரேன்,” எனக் கூறுகிறார்.

அதனைத் தொடர்ந்து அருண், முத்துவுக்கு போன் செய்யும் காட்சியும், அந்தப் போனை முத்து அட்டெண்ட் செய்யும் காட்சியும் உள்ளன.

இதை அடுத்து, இருவரும் நேருக்கு நேர் சந்திப்பார்களா? அவர்கள் சத்யாவின் சம்பவத்தால் ஒன்று சேர்வார்களா? அதன் பிறகு, அருண் – சீதா திருமணம் சமூகமாக நடைபெறுமா?

எல்லாவற்றையும் பொறுத்திருந்து பார்ப்போம்!