1000 நாட்களைத் தாண்டி ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிக்கும் சிம்பு படம்.. இப்படி ஒரு சாதனையா?

By John A

Published:

தமிழ் சினிமாவில் கடைசியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக 800 நாட்களைத் தாண்டி ஓடிய படம் எதுவென்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம் மட்டுமே. சென்னையிலுள்ள ஒரு திரையரங்கில் 800 நாட்களைத் தாண்டி ஓடி வரலாற்றுச் சாதனையைப் பெற்றது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்து இமாலாய வெற்றியைப் பெற்றிருக்கிறது சிம்புவின் படம்.

தனது தந்தையின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவின் அத்தனை துறைகளையும் கற்றுத் தேர்ந்து ஒரு மினி சினிமா பல்கலைக்கழகமாகத் திகழ்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய டி.ராஜேந்தர் ஹீரோவாகவும் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சிம்பு பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010-ல் வெளியான திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த இப்படம் முதல் சில நாட்கள் சரியாகப் போகவில்லை. ஆனால் படத்தின் மேக்கிங், இசை, சிம்பு-த்ரிஷா கெமிஸ்ட்ரி போன்றவற்றால் படம் நாளடைவில் சூப்பர் ஹிட் ஆனது. கார்த்தி – ஜெஸ்ஸி என்ற கூட்டணி இன்றுவரை பேசப்படுகிறது. எப்போது பார்த்தாலும் பிரெஷ்ஷான காதல் கதையான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் காதலர்களின் ஆல் டைம் பேவரிட் படமாக இருக்கிறது.

சூர்யா 45 படத்தில் இணையும் அடுத்த இரண்டு நடிகைகள்.. ஃபேன் பேஸ் அதிகமாச்சே இவங்களுக்கு

தற்போது இந்தப் படம் தான் 1000 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்திருக்கிறது. ஒவ்வொரு காதலர் தினத்தன்று விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் சென்னையில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா தினசரி ஒரு காட்சி வீதம் திரையிடப்பட்டது. எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாகவே இருந்ததால் தியேட்டர் நிர்வாகமும் படத்தினை திரையிட்டது. இதனால் இப்படம் தற்போது 1000 நாட்களைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஹரிதாஸ் படமே தொடர்ச்சியாக 3 தீபாவளியைக் கண்ட பெருமையைக் கொண்டிருக்கிறது. ஆனால் தொழில்நுட்பமும், சினிமாவும் அசுர வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஒரு படம் இப்படி ஒரு சாதனையைப் பெற்றிருப்பது சினிமாவின் ஆரோக்கியமான போக்கையே காட்டுகிறது. நல்ல கதைக்கு விளம்பரமே தேவையில்லை என்பதைப்போல் லப்பர் பந்து எப்படி இமாலய வெற்றி பெற்றதோ அதே போல் விண்ணைத் தாண்டி வருவாயா படமும் சப்தமில்லாமல் பெரும் சாதனையைப் பெற்றிருக்கிறது.