சிம்பு நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிப்பவர்களின் குறித்த விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இதன்படி இந்த படத்தில் தற்போது நடிக்கும் மூவரின் தகவல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
மாநாடு படத்தில் சிம்புவுடன் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் கருணாகரன் ஆகிய மூவரும் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில அறிவிப்புகள் ஒரு சில நிமிடங்களில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது
சிம்பு நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது