பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் இறுதிக்கட்ட டைட்டில் வழங்கும் விழாவானது மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
106 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், போட்டியில் முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது பரிசு சாண்டிக்கு வழங்கப்பட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர் சாண்டி, முகின், கவின், தர்ஷன், அபிராமி ஆகியோர் சாண்டி வீட்டில் விருந்து உண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக உள்ளனர்.
நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து சாண்டியை அவர் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது தர்சனும் கூட இருந்துள்ளார்.
தர்சனுக்கு ஒரு பரிசு கொடுத்துவிட்டு சாண்டியை கட்டியணைத்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.