கோலிவுட்டினைப் பொறுத்தவரை அதிக சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் என்றால் அது நம்ம சிம்புதாங்க. அவருடன் நடிக்கப் பயப்படும் நடிகைகளும் உண்டு. ஏனெனில் அவருடன் சேர்ந்து நடித்தாலே சர்ச்சை என்று பயப்படத் துவங்கிவிடுவர்.
அதேசமயம் அவருக்கு கணக்கில் அடங்காத ரசிகர் பட்டாளமும் உண்டு, சிம்பு ரசிகர் அப்டின்னாலே அவங்க மனசில பட்டதை அப்படியே சொல்லக்கூடியவங்களாத்தான் இருப்பாங்க.
சிம்புவின் தங்கை இலக்கியா மற்றும் குறளரசனுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அடுத்து சிம்புவின் திருமணம்தான். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்தினை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
அவரும் வாயைத் திறந்தபாடில்லை, ஆனால் தற்போது சிம்புவின் வருங்கால மனைவி குறித்த விஷயத்தை அவரே சொல்லியுள்ளார். அதாவது கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்துவரும் அவர் நேற்று நடிகர் சிம்பு விடிவி கணேஷுடன் சேர்ந்து சமையல் செய்துள்ளார்.
அப்போது விடிவி கணேஷ் வரப்போற பொண்ணுக்கு சமைக்கும் வேலையே இருக்காது போல? என்று கேட்க, நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் கோபமாக, “வரப்போற பொண்டாடி என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை செய்யவா வராங்க? என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன். உங்கள மாதிரி இல்ல” என்று கோபமாக கூறினார்.
இதைப் பார்த்த ரசிகர்களோ உங்க பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வெச்சவங்க என்று பாராட்டி வருகின்றனர்.