தமிழ் சினிமாவில் அந்த காலம் தொட்டே ஒவ்வொரு காலத்திலும் பல நடிகைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். அவர்கள் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டாலோ அல்லது அவர்கள் காலம் கடந்து மறைந்து போனாலும் கூட அவர்கள் நடித்த கதாபாத்திரங்களும், திரைப்படங்களும் மக்கள் மத்தியில் எப்போதுமே நினைவில் தான் இருக்கும்.
அந்த வகையில் கடந்த 90-களுக்கு முன்பான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடித்து பல இளசுகளை கிறங்கடித்தவர் என்றால் நிச்சயம் சில்க் ஸ்மிதாவை கண் மூடிக்கொண்டு கை காட்டி விட முடியும். கிளாமரான கதாபாத்திரங்களிலும், கிளாமரான பாடல்களிலலும் மட்டுமல்லாமல் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து அசர வைத்திருந்தார்.
அடியே மனம் நில்லுனா நிக்காதடி, நேத்து ராத்திரி அம்மா, பேசக்கூடாது, பொன்மேனி உருகுதே, ஆடி மாச காத்தடிக்க உள்ளிட்ட பாடல்களில் சில்க் ஸ்மிதாவின் ஆட்டங்கள் ரசிகர்கள் அனைவரையுமே கட்டிப்போட்டு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு வளர்ந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் இன்று வரையிலும் மர்மமாக தான் இருந்து வருகிறது.
ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சில்க் ஸ்மிதா மிகக் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகைகளை கீழே தள்ளிவிட்டு நம்பர் 1 என்ற அரியணையிலும் ஏறி அமர்ந்திருந்தார். இப்படி பல பாசிட்டிவ் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் சினிமா துறையில் சந்தித்த கஷ்டங்கள் மிக ஏராளம் தான். அந்த வகையில் நேத்து ராத்திரி யம்மா என்ற பாடலின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவமும் அதன் பின்னால் அந்த பாடல் வெற்றி பெற்றதற்கான காரணம் பற்றியும் தற்போது பார்க்கலாம்.
கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படத்தில் ‘நேத்து ராத்திரி யம்மா’ என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலில் சில்க் ஸ்மிதா ஆடி இருந்த நிலையில் பட ரிலீசுக்கு பின்னர் அதிக கலெக்ஷன்களை அந்த படம் அள்ளியதுடன் மட்டுமில்லாமல் இந்த படத்தின் வெற்றிக்கு சில்க் ஸ்மிதாவின் நடனமும் மிகப்பெரிய பங்காற்றி இருந்தது.
ஆனால் இந்த பாட்டிற்கான படப்பிடிப்பின் போது டான்ஸ் மாஸ்டர் புளியூர் சரோஜா அந்த அளவுக்கு சில்க் ஸ்மிதாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டியதாக கூறப்படுகிறது. பல ஏச்சுகளையும், பேச்சுகளையும் ஸ்பாட்டில் வாங்கிக் கொண்ட சில்க் ஸ்மிதா அதை விட அதிகமான அளவில் பட ரிலீசுக்கு பின்னர் பிரபலத்தையும், புகழையும் பெற்றுக் கொண்டார் என்பது தமிழ்நாடே அறிந்த விஷயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.