பினாலேவில் சிறப்பு விருந்தினராக ஸ்ருதி ஹாசன்!!

106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது. அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் கமல் ஹாசன். அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின்…

106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.

அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் கமல் ஹாசன். அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் பினாலேவிற்கு கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.

8b2940d03d4c03bd23c6c216c273eb74

அவருக்கு கமல் ஹாசன் ஒரு வேலையைக் கொடுத்தார், அதாவது அவர் கையில் ஒரு எவிக்ஷன் கார்டைக் கொடுத்து உள்ளே சென்று அந்த கார்டில் உள்ள நபரை அழைத்து வர வேண்டும் என்று கூறினார்.

உள்ளே வந்த அவர் போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசினார். அடுத்து அவருக்கு ஃப்ரூட்டியினைக் கொடுத்து குடிக்க வைத்தனர்.

வீட்டினை சுற்றிப் பார்க்க நினைப்பதாக கூறி, பெட்ரூமை சுற்றிப் பார்த்தார், மேலும் வீடு கிளின் ஆக உள்ளதாக கூறினார்.

அடுத்து வெளியில் உள்ள பெயிண்ட்டிங்குகளை பார்த்து ரசித்தார், முகின் மற்றும் சாண்டியுடன் சேர்ந்து பாட்டுப் பாடினார்.

இறுதியில், அவர் கையில் உள்ள கார்டை காட்ட அதில் லாஸ்லியா பெயர் இருந்தது, அதன்படி லோஸ்லியாவை வெளியில் அழைத்து சென்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன