நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா… கடுப்பான ரசிகர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை…

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

7109296e2f5a35f024fe6003724c0567

இஷ்டம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்து உள்ளார்.

ஸ்ரேயா ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதனால் பார்சிலோனாவில் கணவருடன் வசித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் தன் கணவர் வீட்டில் பாத்திரம் கழுவும் வீடியோவினை வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால்விட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து, மேஜிக் செய்யும் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு இருந்தார். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றன.

தற்போது அவர்  நடுரோட்டில் மழையில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிடம் ரசிகர்களோ ஏன் இப்படி கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்று கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன