நடிப்பே வேண்டாம் என தலைதெறிக்க ஓடிய சிவாஜி… அப்படி என்ன நடந்திருக்கும்?

திரை உலகில் இன்றுவரை நடிப்பில் ஜாம்பவானாக பார்க்கக்கூடிய ஒரே நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான். நம் நாட்டின் மிகப்பெரிய விருதான செவாலியே விருதை வாங்கியவர் நடிகர் சிவாஜி கணேசன். இத்தகைய பெருமைக்குரிய மனிதர் ஒரு காலத்தில் நடிப்பே வேண்டாம் என தூக்கி எறியும் சூழ்நிலையும் அவருக்கு உருவாகியிருக்கிறது. அது என்ன சூழ்நிலை அதன்பின் சிவாஜி எடுத்த முடிவு என்ன? மீண்டும் நடிப்பிற்கு வர காரணம் இது பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் சிவாஜி தன்னுடைய ஏழாவது வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி மதுரையில் ஸ்ரீபாலகான சபாவில் சேர்ந்துள்ளார். அந்த நாடகக் குழுவில் இருந்த சின்ன பொன்னுசாமி என்பவர்தான் சிவாஜிக்கு நடிப்பு பயிற்சி சொல்லி கொடுத்த ஆசிரியர். அதே நாடக சபாவில் தான் நடிகர் எம்.ஆர்.ராதாவும் நடிப்பு பயிற்சி பழகி வந்தார். அந்த நேரத்தில் சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் மிக நெருக்கமான நட்புடன் இருந்து வந்துள்ளனர்.

அப்போது கேரளாவைச் சார்ந்த கிருஷ்ணன் பிள்ளை என்பவரின் தலைமையில் நாடக சபா ஒன்று கேரளாவிற்கு நாடகம் நடத்த சென்றது. அங்கு பல ஊர்களில் அடுத்தடுத்து நாடகங்கள் நடத்தப்பட்டது. இந்த முறை கிருஷ்ணன் பிள்ளை அவர்கள் மனோகரா வசனத்தை சிவாஜியை ஒருமுறை கூறி நடித்துக் காட்ட சொல்ல சிவாஜி அந்த வசனத்தை மிக சிறப்பாக நடித்துக் காட்டினார்.

சிவாஜியின் நடிப்பை பாராட்டிய கிருஷ்ணன் பிள்ளை அடுத்தடுத்து வரும் நாடகங்களில் மனோகராவாக நடிக்க சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நாடகங்களும் நடத்தப்படுகிறது. சில நாட்களில் மழை காரணமாக இந்த நாடகம் சரியாக நடத்தப்பட முடியவில்லை.

நாடகம் நடத்த முடியாததால் சிவாஜி அவர்களின் நெருங்கிய நண்பரான கே.ஏ.தங்கவேலு அவர்களின் அம்மாவை கேரளாவில் இருந்து அழைத்துச் செல்ல சிவாஜி வருகிறார். அப்போது கேரளாவில் இருந்து காட்டுப்பாதை வழியாக பொள்ளாச்சி வரை நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த காட்டுப்பாதையில் நடந்து செல்லும் பொழுது தங்கவேலுவை எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து விடுகிறது. அப்போது அவரை தன் தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அருகில் உள்ள கிராமத்தை நோக்கி சிவாஜி சென்றுள்ளார். இவர்கள் நாடக கலைஞர் என்பதை அறிந்து கொண்ட அந்த கிராம மக்கள் இவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வழி செலவிற்கு பணமும் கொடுத்து உதவினர்.

நடிகர் அஜித்தை போல ரியல் ஹீரோவாக மாறிவரும் அஜித் மகன் ஆத்விக்!

அதன் பின் நடந்தே பொள்ளாச்சி வந்த சிவாஜி, தங்கவேலு அவர்களுடைய அம்மா மூவரும் இணைந்து பொள்ளாச்சியில் சில நாடகங்களை நடத்தி காசை மீட்டெடுத்த பின் திருச்சி வந்துள்ளனர். இந்த பயணத்தில் ஏற்பட்ட மிக மோசமான விளைவு சிவாஜிக்கு நாடகத்தின் மீது இருந்த ஆர்வத்தை முற்றிலுமாக குறைக்க தொடங்கியது.

அதன் பின் விரக்தியின் உச்சத்தை அடைந்த சிவாஜி திருச்சியில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் மெக்கானிக்கல் வேலையில் சேர்ந்துள்ளார். அப்படி நடிப்பின் மீது இருந்த ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சிவாஜி சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் நடிப்பு ஆசை வர சினிமாவில் நுழைந்து அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நாயகனாக வலம் வருகிறார்.