நடிகர் அஜித்தை போல ரியல் ஹீரோவாக மாறிவரும் அஜித் மகன் ஆத்விக்!

தமிழ் சினிமாவில் சினிமாவை தாண்டி மற்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட சிறந்த மனிதராக வலம் வருபவர் தான் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் சினிமாவில் படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தோட்டக்கலை, துப்பாக்கிச் சுடுதல், சைக்கிள் – பைக் டூர், போட்டோகிராபி ,இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ரேசிங் என பல விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்தி ரியல் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார். மேலும் தனக்கென எந்த ரசிகர் கூட்டமும் வேண்டாம் என தற்பெருமைக்கு ஆளாகாத இயல்பான மனிதராகவும் வாழ்ந்து வரக் கூடியவர் நடிகர் அஜித்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டது. அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

அதற்கு அடுத்ததாக அஜித் பிறந்தநாள் அன்றான மே ஒன்றாம் தேதி நள்ளிரவு அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் மாஸாக வெளியாகியது. அதில் அஜித் அடுத்ததாக மகள் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் வெளியான கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் குறித்து எந்தவித அப்டேட்டுகளும் வெளியாகாத நிலையில் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்பொழுது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் துபாய் அடுத்து அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அங்கு அஜித் மற்றும் நடிகை திரிஷா இடையேயான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள் இடம் பெறுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சூர்யாவின் அயன் படத்தை காப்பி செய்யும் வெங்கட் பிரபு.. தளபதி 68 படத்தில் இப்படி ஒரு காட்சியா?

நடிகர் அஜித் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு இணையாக தன் குடும்பம் மற்றும் பொழுதுபோக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பைக் டூராக வெளிநாடு சுற்றுப்பயணங்கள் சென்று விடுமுறையை கொண்டாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளவர். அந்த வகையில் அஜித்தின் மகன் குறித்த சில சுவாரசியமான தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்களின் மகன் ஆத்விக் சென்னை கால்பந்து அணியில் சேர்ந்து இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாக இருந்தது. சமீபத்தில் சென்னை அணி சார்பாக ஆத்விக் விளையாடியதாகவும் அதற்கான பதக்கங்களை வென்றுள்ளதாகவும் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த போட்டோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வர இதற்கு அஜித் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். மேலும் நடிகர் அஜித் போல் அவரது மகனும் ரியல் ஹீரோவாக வளர்ந்து வருவதாக மனதார பாராட்டியும் வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...