ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் கலக்கிவரும் நடிகையாவார். இவர் நடிகையாக மட்டுமல்லாது மாடலிங்க், நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல் என பிசியாகவே இருப்பவர்.
16 வயதில் இருந்தே மாடலிங் செய்துவந்த இவருக்கு, 1993 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதாவது பாஜிகர் என்னும் திரைப்படத்தின்மூலம் அறிமுகமான ஷில்பாவுக்கு பெரிதளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தனது சினிமா வாழ்க்கையில் சாதிக்க அவர் பல வகைகளிலும் போராடினார். தத்கன், ரிஷ்தே போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பிற்கு சான்றாகக் கூறலாம். ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்துவருகிறார்.
தற்போது, இவர் கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து காமெடியான டிக்டாக் வீடியோ வெளியிட்டு அதனை வைரலாக்கியுள்ளார். அந்த வீடியோவில், வீட்டு வேலைக்காரப் பெண் முத்தம் கொடுக்க வேண்டாம் எனக் கூறினேன். அவர் கேட்காமல் முத்தம் கொடுக்கிறார் என்று கூற, கடுப்பான ஷில்பா ஷெட்டியோ அதைக் கேட்டு கோபமாகி, கணவரை வெளுத்து வாங்குகிறார்.
இந்த வீடியோவினை ரசிகர்கள் பெரிய அளவில் வைரலாக்கியுள்ளனர். இது ரசிகர்களைக் குஷிப்படுத்துவதோடு, கொரோனா ரீதியான விழிப்புணர்வாக உள்ளது.