தர்சனுக்கு லெட்டர் எழுதிய ஷெரின்… அதனை போட்டுடைத்த தர்சன்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த டிஆர்பியை  தின்னும் அளவு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியானது…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த டிஆர்பியை  தின்னும் அளவு சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியானது நெஞ்சில் குடியிருக்கும் வெறித்தனம் பாடலுடன் தொடங்கியது.

காலையிலேயே, தர்ஷன் வாயை வெச்சுகிட்டு இருக்காமல், ஷெரின் தனக்கு எழுதிய லெட்டரை அனைவர் முன்னும் சொல்ல, மற்றவர்கள் அதனை கிண்டல் செய்ய கடுப்பாகிப் போனார் ஷெரின்.

27c94d7c2f53765718b5ce37640a7e14

இதனால் தனியே சென்று கேமிரா முன் புலம்பிய ஷெரின், அப்படியே சோகமாக யாரிடமும் பேசாமல் பெட்ஷீட்டால் முகத்தினை மூடிக் கொண்டார்.

அங்கு வந்த தர்சன் ஷெரினை சமாதானப்படுத்த முயல்கையில், கோபமாக இருந்த ஷெரின் லெட்டரை நீ படித்ததில் பிரச்சினை இல்லை, ஆனால் அதை அனைவருக்கும் தெரியப்படுத்தியது தவறு என்று கூறினார், மேலும் அவ்வாறு செய்தது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்.

எப்போதும் சரியாக செயல்படும் தர்ஷன் இந்தமுறை இவ்வாறு ஏன் நடந்துகொண்டார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன