மக்கள் ஆதரவு இல்லையோ என குழம்பிப்போன ஷெரின்!!

பிக் பாஸ் முடியவுள்ளதால், போட்டியாளர்கள் பிக் பாஸுடன் பேசலாம் என்று கமல்ஹாசன் கூற, அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெஷன் ரூமுக்குள் சென்று பேசினர். முதல் ஆளாக சென்ற சாண்டி உணர்ச்சி பொங்கப் பேசினார். அடுத்து…

பிக் பாஸ் முடியவுள்ளதால், போட்டியாளர்கள் பிக் பாஸுடன் பேசலாம் என்று கமல்ஹாசன் கூற, அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெஷன் ரூமுக்குள் சென்று பேசினர்.

முதல் ஆளாக சென்ற சாண்டி உணர்ச்சி பொங்கப் பேசினார். அடுத்து உள்ளேவந்த லாஸ்லியாவிடம் பிக் பாஸ் கேள்விகள் கேட்டார். அவர் தழுதழுத்தவாறே ஆரம்பம் முதல் பேசினார்.

c987ed3f7ce4a528de16fb82b91b34a9

அடுத்து பேசிய முகின் தமிழக மக்களிடம் இருந்து கிடைத்த ஆதரவினைப் பற்றிப் பேசினார்.

கடைசியாக பிக் பாஸ் ஷெரினிடம் கேள்விகளை கேட்டார். நான் வெளியே சென்று என்னுடைய நார்மல் வாழ்க்கையை துவங்கப் போகிறேன், இருப்பினும் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு வருத்தமாக உள்ளது என்றார்.

இந்த வீட்டில் எதை மாற்ற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, என்னுடைய பொறுமையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதே மாதிரியான  ஷெரினாக இருக்கும்பட்சத்தில் என்னை பலருக்கும் பிடிக்கும் என்றார்.

மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டேன் உங்களது கைதட்டல்கள் மியூசிக் போல் உள்ளது. நடுவில் எனக்கு உங்களிடம் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்ற பயம் இருந்தது என்றார்.

எங்களுடைய பயணம் வெளியிலும் தொடங்கும் என்றார், மேலும் இப்படிக் கேட்பதால் எனக்கு அழுகை வருகிறது என்று சோகமாக பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன