வார இறுதியான நேற்று கமல் ஹாசன் மக்கள் முன் தோன்றிப் பேசினார், வழ வழ என இழுக்காமல் நேரடியாக நாமினேஷனுக்கு வந்தார்.
அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அரங்கத்தில் இருந்த போட்டியாளர்கள் ஒருபுறம் அதிர்ந்து போயினர்.
அப்போது ஷெரின், “தர்ஷன் நீ போகவேண்டியது இல்லை. நான்தான் வெளியில் செல்ல வேண்டும். பிக் பாஸ் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னார்.
தர்சன் அவரை சமாதானப்படுத்த முயல்கையில், நீ இல்லாமல், நான் இங்கு எப்படி? என்று அழுதார். கவின் போன போது தாரை தாரையாக கொட்டிய லாஸ்லியாவுக்கு அண்ணன் தர்சன் போனபோது கண்ணீரையே காணவில்லை.
வெளியே வந்த தர்சனிடம், “இது எனக்கே பெரிய ஏமாற்றமாக உள்ளது, தர்சன் மேலும் மேலும் உயர வேண்டும்” என்று கூறினார்.