தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வண்டலூர் ஜூவிற்கு சென்றதாகவும் அங்கு நடந்த ஒரு சம்பவம் அவரை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது
வண்டலூர் ஜூவிற்கு ஷாலினி அஜித் அதே தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு புலிகள் கூண்டில் இருந்ததை சுற்றிலும் உள்ள சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். அப்போது திடீரென ஜூவில் பணிபுரியும் ஒரு பெண்ணை புலி கடித்ததாகவும் இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த தாக்குதலை நேரில் பார்த்த ஷாலினி அஜித்தும், அவரது குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர்கள் உடனடியாக வீடு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது