பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷாக்சி அகர்வால், இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக துவக்க காலங்களில் இருந்தார். அதன்பின்னர் முதல் படமாக ராஜா ராணி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
அதன்பின்னர், காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த இவர் ஓரளவு ரசிகர்களால் அறியப்பெற்ற நடிகையானார், அதேபோல் விஸ்வாசம் படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்..
பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஷெரின் மற்றும் அபிராமியுடன் நட்புக் கொண்டிருந்த இவர், மாடர்ன் பொண்ணாக இருந்தாலும், கவினுடனான காதல் தோல்வியால் ரசிகர்களின் ஆதரவினை எளிதில் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 50 நாட்களில் வெளியேறிய இவருக்கு கோலிவுட்டில் நடிக்கத் தொடர் வாய்ப்புகள் கிடைத்தன.
ஜி,வி. பிரகாஷ்க்கு ஜோடியாக ஆயிரம் ஜென்மம் படத்திலும், ராய் லட்சுமி நடித்து வரும் சின்ட்ரெல்லா படத்திலும் நடித்து வருகிறார்.
ஊரடங்கால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் ஷாக்சி அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் வீட்டிலேயே கியூட்டாக போட்டோஷுட் நடத்தியுள்ளார். ரசிகர்கள் சின்ட்ரெல்லா டிரஸில் கியூட்டா இருக்கீங்க என்று கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.