தொடர் பாலியல் தொல்லை… சினிமா வாய்ப்பினை நிராகரித்த தொகுப்பாளினி கல்யாணி!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி. இவர் அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரவு தேவாவுடன் இவர் நடனமாடிய…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகையும், தொகுப்பாளினியுமான கல்யாணி. இவர் அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். பிரவு தேவாவுடன் இவர் நடனமாடிய சென்னைப் பட்டிணம் சாங்க் 90 ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சாங்க் ஆகு.

 மேலும் ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாது தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார். இவர் பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பாவனாவுடன் இணைந்து, சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

919374fe91e178b00c817f683e2ccfa6-1

வருடங்கள் ஓடினாலும் இந்த நிகழ்ச்சியினை இன்னும் யாரும் மறக்காததற்குக் காரணம் கல்யாணியும் குறும்புத்தனத்தாலும், கொஞ்சல் பேச்சாலும்தான். இவர், 7 ஆண்டுகளுக்கு முன்னர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

பல ஆண்டுகள் கழித்து பாலியல் தொல்லையால்தான் சினிமாவில் இருந்து விலகியதாக கல்யாணி கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

அதாவது, “எனக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்து வந்தன. சிலர் என் வீட்டிற்கு கால் செய்து என் அம்மாவிடம் பெரிய நடிகர்களின் படத்தில் உங்கள் மகளுக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருகிறோம். ஆனால் உங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் நாங்கள் சொன்னபடி வாய்ப்பு கொடுப்போம் என்பார்கள்.

என் அம்மா அட்ஜஸ்ட்மெண்ட் என்றால் கால்ஷீட்டுக்கான தேதி பிரச்சினைபோல் என நினைத்து சரி சொல்லுவார். அதன்பின்னர் அட்ஜெஸ்மென்ட் என்ன என்பதைப் புரிந்து கொண்ட நான் அம்மாவிடம் சொல்ல, அதன்பின்னர் எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் துளி கூட இல்லாமல் போனது” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன