கணவரை விவாகரத்து செய்த பொன் மகள் வந்தாள் சீரியல் நடிகை மேக்னா!!

மலையாள நடிகையான மேக்னா வின்செண்ட், தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார், சின்னத் திரையில் கால் பதித்தாலும் கேரளத்து அம்மணியின் அழகிற்கு ரசிகர்கள் அதிக அளவிலேயே இருந்தனர். முதல் சீரியலிலேயே தனது…

மலையாள நடிகையான மேக்னா வின்செண்ட், தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார், சின்னத் திரையில் கால் பதித்தாலும் கேரளத்து அம்மணியின் அழகிற்கு ரசிகர்கள் அதிக அளவிலேயே இருந்தனர்.

முதல் சீரியலிலேயே தனது குடும்பப் பாங்கான கெட்டப்பில், குடும்பப் பெண்களின் ஆதரவினையும் பெற்றார். ஏறக்குறைய 2 வருடங்களுக்கும் மேல் ஓடிய இந்த சீரியலில் நடித்ததன்மூலம் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றார்.

05549b91e90543cffec27c36b696fc43

அதன்பின்னர் அந்த சீரியல் முடிந்ததும் பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சியிலேயே தொடர்ந்து நடித்துவந்தார். இந்த சீரியல் முடிந்து தற்போது மூன்று மாதங்கள் ஆகிய நிலையில் இவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இவர் மலையாள நடிகரான டான் டோமி என்பவரை காதலித்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இவருக்கு இவரது தங்கைக்கும் ஒரேநாளில் நிச்சயதார்த்தம் நடைபெற்றநிலையில் மேக்னாவுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது, ஆனால் திருமணம் முடிந்து சில மாதங்களில் இவர்கள் இருவரும் தனித் தனியாகப் பிரிந்து  வாழத் துவங்கினர்.

அதேசமயம் விவாகரத்து வழக்கு நடந்துவந்த நிலையில், தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது. டாம் டோமி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மேக்னாவும் சக நடிகரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன