அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி, அன்பே சிவம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தீபா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தன் வாழ்க்கை பற்றிய உண்மைகளை மனம் திறந்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நடிகை தீபாவிற்கு திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் இருந்து வந்த நிலையில் சென்ற ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்த சாய் கணேஷ் பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். தோளுக்கு மேல் வளர்ந்த மகனை வைத்துக்கொண்டு திருமணம் செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல் கணவர் விட்டுச் சென்றார்:
இதை தொடர்ந்து தீபா யூடியூப் சேனல் ஒன்றில் அளித்திருந்த பேட்டியில், எனக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்தது, அதற்கு அடுத்த வருடமே குழந்தையும் பிறந்தது. என் திருமண வாழ்க்கை எனது 23 வயதிலேயே முடிந்தது அப்போது என் மகனுக்கு 5 வயது, அவன் கையை பிடித்துக்கொண்டு எங்கே போவது என தெரியாமல் நடுத்தெருவில் நின்றேன். அப்போது இந்த சமுதாயத்தில் ஒரு பெண்ணாக தனியாக எப்படி வாழப்போகிறேன் என பயம் இருந்தது. என்னை சுற்றி இருந்தவர்கள் தப்பாக இருந்தார்கள் அந்த நேரம் எதுக்கு வாழனும் என்கிற எண்ணம் கூட வந்தது. ஆனால் அந்த பயத்தை விட என் மகன் கொடுத்த தைரியம் அதிகமாக இருந்தது. அது தான் என்னை இன்று வரை அவனுக்காக ஓட வைத்துக் கொண்டிருக்கின்றது.
ஒரு பெண்ணாக பல பிரச்சனைகளை தனியாக சந்தித்து வருகிறேன். யாரிடம் உதவி கேட்டாலும் தப்பாகத்தான் பார்க்கிறார்கள். நானும் பல வருடமாக பிரச்சனைகளை தனியாக சமாளித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது ஆனால் இப்போது தான் நல்ல கதாப்பாத்திரங்கள் என்னை தேடி வருகிறது. இந்த இடத்திற்கு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கன்னு எனக்கு தான் தெரியும் வெளியில் பார்ப்பவர்களுக்கு அந்த கஷ்டம் புரிவதே இல்லை.
மகனுக்காக இரண்டாம் திருமணம்:
நான் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட போது பலரும் விமர்சித்தனர். ஆனால் என் மகனும் என் அப்பாவும் ஆசைப்பட்டதால் தான் திருமணம் செய்துக்கொண்டேன் அதுவும் சில நாட்களில் ஏன் செய்துக்கொண்டேன் என வருத்தப்பட்டிருக்கிறேன்.
நானும் என் மகனும் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தேன். அதற்கு பலரும் அளித்த மோசமாக விமர்சனங்களை பார்த்து கண்கலங்கிவிட்டேன். எப்பொதும் என் மகனுடன் இருப்பதை தான் நான் விரும்புகிறேன், அவன் தான் எல்லாம், அவனுக்காக தான் நான் உழைக்கிறேன், அவனை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என கண்ணீருடன் பேசியுள்ளார்.