50களில் பிரபலமான கம்யூனிஸ்ட்டாக விளங்கியவர் சி.ஏ பாலன். பல போராட்டங்கள், அதிரடி போராட்டங்களை நிகழ்த்தியது வன்முறைகள் பல செய்தது என இவர் கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தவர்.கோவை சிறையில் நீண்ட நாட்களாக தூக்கு தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தவர் பின்பு தூக்கு தண்டனை ரத்தாகி விடுதலை செய்யப்பட்டார்.
இவர் ஜெயிலில் இருந்தபோது எழுதிய நாவல்தான் தூக்கு மர நிழலில் என்ற சுயசரிதை.
அந்தக்காலத்தில் ஜெயில் கூடங்கள் எப்படி இருந்தன. சிறை வாழ்க்கை எவ்வளவு கொடியது என்றும் பக்கத்து செல்களில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது எப்படி சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு வருகின்றனர் என்பது பற்றியும் எழுதி இருந்தார்.
இந்த புத்தகம் தூக்கு மர நிழலில் என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்டது.
பல பதிப்பகங்கள் மறு பதிப்பாக பல முறை வெளியிட்டு விட்டது. மிக அற்புதமான மனிதர்களின் உணர்வுகளையும் கொலை செய்து விட்டு உள்ளே வருகிறவனின் மனநிலையை சொன்ன கதையாக இருந்தது.
சில வருடங்கள் கழித்து இயக்குனரும், நடிகருமான மேஜர் சுந்தர்ராஜன் தூக்குமர நிழலில் எழுத்தாளர் சி.ஏ பாலனை கதாசிரியராக கொண்டு இயக்கிய படம் இன்று நீ நாளை நான்.
இந்தப்படமும் நல்ல அழகான பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏன் கொலை செய்கிறான் என்பதை விளக்கிய கதை.
தூக்கு மர நிழலில் சுயசரிதையில் ஒரு சம்பவமாக சொல்லப்படும் ஒரு உண்மை கதையை எடுத்து கொஞ்சம் இளையராஜாவின் இசைக்கோர்ப்பு செய்து அந்த படத்தை உணர்வுப்பூர்வமாக இயக்கி இருப்பார் இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள்.
தூக்கு தண்டனை கைதியாக சிவக்குமார், அவரது அண்ணனாக ஜெய்சங்கர் மற்றும் லட்சுமி, சுலக்ஷனா நடித்த வித்தியாசமான படமிது.
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இப்படத்தில் இடம்பெற்றதுதான். அது பட்டி தொட்டியெங்கும் வரை இது வரை ஒலித்து கொண்டிருக்கிறது.