நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் படமாகும். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படமானது ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தத் திரைப்படமானது திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தநிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 26 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இப்போது கொரோனோ தீவிரமாக தலைவிரித்தாடும் நிலையில் ஜூலை மாதம் வரை திரையரங்குகள் திறக்கப்படாது என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில் மாஸ்டர் பட அப்டேட் ஏதும் கிடைத்துவிடாதா? என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்க, மாஸ்டர் படத்திற்கு சென்சார் சர்ட்டிபிகேட் கிடைத்ததாக ஒரு தகவல் நேற்று வெளியானது.
இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் ஏக போக குஷியாகினர். ஆனால் மாஸ்டர் படக்குழு தரப்பில், “மாஸ்டர் படம் சென்சார் செய்யப்பட்டது என்று வலைதளங்களில் ஒரு சர்ட்டிபிகேட் உலாவருகின்றது, ஆனால் அந்தத் தகவல் வதந்தி ஆகும், யாரும் நம்ப வேண்டாம் என்றும் மறுக்கப்பட்டுள்ளது.