ஈஸ்வரன் படத்தின் திரைவிமர்சனம்!

By Staff

Published:

e7d1d2c5c11a93a7e0065beffa5725d8

சுசீந்திரனின் முந்தைய சில படங்களை போன்று சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் கதையும் சின்ன ஊரில் தான் நடக்கிறது. பெரியசாமியின்(பாரதிராஜா) மனைவி இறந்துவிடுவார் என்று கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடர் கணிப்பதுடன் படம் துவங்குகிறது. அவர் கணித்த சில நிமிடங்களில் பெரியசாமியின் மனைவி இறந்துவிடுகிறார்.

கடினமாக உழைக்கும் விவசாயியான பெரியசாமி தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கிறார். ஆனால் வளர்ந்த பிறகு அந்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் பிசியாகி விடுகிறார்கள். 25 ஆண்டுகள் கழித்து பெரியசாமியின் மனைவி இறந்த நாளில் அவரை பார்க்க பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் வருகிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்து பெரியசாமி சந்தோஷப்படுகிறார்.

பெரியசாமியை பார்த்துக் கொள்ளும் ஈஸ்வரனும் சந்தோஷப்படுகிறார். பெரியசாமியால் சிறையில் இருந்த ஒரு கிரிமினலால் அந்த குடும்பத்திற்கு பிரச்சனை வரும் என்பது அவர்களுக்கு தெரியாது. குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று ஜோதிடர் சொல்ல நிலைமை மோசமாகிறது.

சிம்புவின் அபார நடிப்பும், தமனின் பின்னணி இசையும் படத்தை தூக்கிப் பிடிக்கிறது. மற்றபடி ஏற்கனவே தெரிந்த கதையை தான் படமாக்கியிருக்கிறார் சுசீந்திரன். பாரதிராஜா அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். பாலசரவணன், முனிஷ்காந்த் ஆகியோர் ரசிகர்களை கவர்கிறார்கள்.

ஹீரோயினுக்கு படத்தில் வேலையே இல்லை. எமோஷனல் காட்சிகள் ஈர்க்கவில்லை. டுவிஸ்ட்டுகள் படம் பார்ப்பவர்களை பாதிக்கவில்லை.
 

Leave a Comment