சசிகுமார் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 2008 ஆம் ஆண்டு ‘சுப்ரமணியபுரம்’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதே படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து நடிகராகவும் அறிமுகமானார்.
அதன் பிறகு ஒரு சில படங்களை மட்டுமே இயக்கிய சசிகுமார் நடிப்பிற்கு வாய்ப்புகள் வந்ததால் நடிப்பில் கவனம் செலுத்தினார். பொதுவாக சசிகுமார் படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் இருக்கும். குடும்பத்திற்கும், நட்பிற்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்ந்தெடுப்பார்.
அதன் படி இவர் நடித்த ‘நாடோடிகள்’, ‘சுந்தர பாண்டியன்’, ‘போராளி’, ‘வெற்றிவேல்’, ‘தாரை தப்பட்டை’ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை சசிகுமார் அவர்களுக்கு பெற்றுத் தந்தது. இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் காம்போவை மக்கள் ரசித்தனர். சமுத்திரக்கனி இயக்கி சசிகுமார் நடிக்கும் படங்கள் மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்த திரைப்படம் ‘அயோத்தி’. இந்த திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகவும் நேர்மறையான விமர்சனங்கள் பெற்றது மற்றும் இயக்கம், திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு மற்றும் சமூக செய்தி கொண்டுள்ளதற்காக பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தற்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இப்படத்தைப் பற்றி சசிகுமார் பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் அயோத்தி கதையைக் கேட்டப் பின்பு தயாரிப்பாளரிடம் ஒரே வார்த்தை தான் சொன்னேன். இந்த படம் பண்ணினா டைரக்ட்டர்க்கு, எனக்கு, ஹீரோயினுக்கு நல்ல பெயர் கிடைக்கும் ஆனா உங்களுக்கு காசு கிடைக்குமான்னு தெரியல ரிஸ்க் தான் அப்படினு சொன்னேன். ஆனா மக்கள் நல்ல கதைக்களம் இருந்தா போதும் நாங்க அந்த படத்தை ரசிப்போம் அப்படினு நாங்க எதிர்பார்த்ததை விட இந்த படத்தை எங்கேயோ கொண்டு போய்ட்டாங்க, மக்களுக்கு நன்றி என்று பேசியிருந்தார் சசிகுமார்.