லட்சுமி மேனன் முதல் பூங்கொடி டீச்சர் வரை… நடிகைகளுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்…

By Meena

Published:

சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் கிய இருவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமார் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு சுந்தரபாண்டியன், வெற்றிவேல், குட்டி புலி, கிடாரி, கொடிவீரன், அயோத்தி, கருடன் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார் சசிகுமார். தற்போது இவர் நடிப்பில் நந்தன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் தன்னோடு பணியாற்றிய நடிகைகளை பற்றி பேசி இருக்கிறார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை பற்றி இனி காண்போம்.

முதல்ல என் கூட ஜோடியா நடிச்சது லட்சுமிமேனன். தொடர்ந்து ரெண்டு படத்துல நடிச்சிட்டாங்க. சுந்தர பாண்டியன் படத்தில் அவங்க நடிக்கும்போது பிளஸ் டூ தான் படிச்சிட்டு இருந்ததாங்க. நல்ல பெர்ஃபார்மர் அவங்க. இன்னும் நல்லா சினிமால வருவாங்கன்னு எதிர்பார்த்தேன் ஆனா அதுக்குள்ள அவங்க டான்ஸ் அந்த மாதிரி போயிட்டாங்க. அடுத்ததா கோவை சரளா மேம் கூட பலே வெள்ளைய தேவா படத்துல சேர்ந்து நடிச்சோம். ரொம்ப எனர்ஜெட்டிக்கான பர்சன் அவங்க. என்ன ஷார்ட் ஆனாலும் நம்ம ஏஜ் லெவலுக்கு எனர்ஜி அவங்க கிட்ட இருக்கும்.

அடுத்ததா வரலட்சுமி ரொம்ப போல்டாபொண்ணு. அவங்க மத்த படத்துல எல்லாம் ஹீரோயின்க்கு பாதுகாப்பா கூட்டநாட்டத்துல நான்தான் இருப்பேன். என்னை பாதுகாப்பா கவனிச்சிக்குற ஒரே ஹீரோயின் வரலட்சுமி தான். தாரை தப்பட்டை படத்துல ரொம்ப அடி வாங்கிட்டு எல்லாம் டிச்சாங்க. டெடிகேட்டான ஆர்டிஸ்ட் அவங்க. அடுத்ததா நிகிலா வெற்றிவேல் கிடாரி படத்துல நடிச்சிருந்தாங்க. ரொம்ப யதார்த்தமா நடிக்க கூடியவங்க. அவங்க நடிச்ச வாழை படம் கூட நான் பார்த்தேன், ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்னும் அவங்க நல்லா வரணும்னு வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார் சசிகுமார்.