கொரோனா லாக் டவுனால் கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் ஆதரவற்றோர் சந்தித்த அவல நிலை சொல்லி மாளாது. ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்காமல் வாடி வருகின்றனர்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இது குறித்து சொல்வது என்னவென்றால், ரேஷன்கார்டுல அரிசி வாங்குறவங்க மட்டும் வறியவர்கள் இல்லை. ரேஷன்கார்டே இல்லாமல் இருக்குற எத்தனையோ பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் இந்த கடுமையான லாக் டவுன் டைம்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்கிறார்.
அதனால் இவரின் முயற்சியால் உணவுபொருட்கள் சேகரித்து மதுரை முழுவதும் அன்னவாசல் என்ற திட்டத்தின் மூலம் வழங்கி வருகின்றார்.
இதை நடிகர் மற்றும் இயக்குனரும் மதுரைக்காரருமான சசிக்குமார் மனமார பாராட்டியுள்ளார்.