சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்குபவர் அருள். இவர்தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர். ஆரம்ப காலங்களில் சூர்யா போன்றவர்கள் சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடித்தனர்.
காலப்போக்கில் அருள் அண்ணாச்சியே நடிக்க ஆரம்பித்தார் . இவருக்கு ஜோடியாக விளம்பரங்களில் ஹன்சிகா போன்றோர் நடித்தனர் . இதனால் இவர் அடுத்து படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்நிலையில் ஒரு பத்திரிக்கையில் வந்திருக்கும் இது போல வதந்தி செய்தியை உண்மையில்லை என மறுத்துள்ளார் ஹன்சிகா.
இதன் மூலம் சரவணா ஸ்டோர் உரிமையாளருடன் ஜோடியாக நடிக்க இருந்தார் என்ற வதந்தி முடிவுக்கு வந்தது.